சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் 2026 ஏப்ரல் 16 முதல் 26 வரை, நடைபெற்ற மிகப்பெரும் சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவான visionsdureel 57வது பதிப்பில், போட்டிப்பிரிவில் இல்லாத, ஆனால் பார்க்கப்படவேண்டிய படமாக பரிந்துரைக்கப்பட்ட படம் "தவறுகளின் அழகு"
Vision du Reel திரைப்பட விழாவில் உயரிய விருதை வென்றது ஸ்பானிய-சீன திரைப்படம் “ஒரு விடியலிலிருந்து மறு விடியலுக்கு”
2026 Vision du Reel திரைப்படவிழாவின் 57 பதிப்பில், வெற்றி பெற்ற திரைப்படங்களின் வரிசையில், முதன்மையான நடுவர் குழு விருதை, 20,000 சுவிஸ் பிராங்களுடன் ஸ்பானிய-சீன இயக்குனர் Xisi Sofia Ye Chen பெற்றுக்கொண்டார். அவருடைய ஆவணத்திரைப்படம் From Dawn to Dawn, ஸ்பானியாவின் பார்சிலோனாவில் இருக்கும் சீனப் புலம்பெயர் சமூகத்தின் வாழ்வை பிண்ணணியாக கொண்டது.
The Recce : ஒரு வேளை, இஸ்ரேல் உகண்டாவில் இருந்திருந்தால் !
குறுந்திரைப்படங்கள் செய்வது மிக கடினமானது. அதிலும் ஆவணக்குறுந்திரைப்படங்கள் மிக கடினமானது. கதையை யதார்த்த சூழலில், இயல்பாக என்ன நடைபெறுகிறதோ அதை அப்படியே சொல்ல வேண்டும். ஆனால் அதை ஒரு 30 நிமிடங்களுக்குள் சொல்லியும் முடிக்க வேண்டும்.
சுவிஸ் நியோனில் - Nicole Nicole (அன்பின் ஆழம்)
சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் வருடங்தோறும் நடைபெறும் மிகப்பெரும் சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவின் 57வது பதிப்பு, ஏப்பிர் 16 முதல் ஏப்பிரல் 26 வரை நடைபெறுகிறது. இத் திரைப்படவிழாவில், பன்னாட்டு குறும், பெரும் ஆவணத் திரைப்படப் படைப்பாளர்களின் படைப்புக்கள் திரையேற்றம் பெறுகின்றன.
61வது சொலொத்தூன் திரைப்படவிழா ( 21 - 28 Jan)
சுவிற்சர்லாந்தின் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றான சொலொத்தூன் திரைப்படவிழா, ஜனவரி 21 முதல் 28, 2026 வரை, சொலொத்தூன் நகரில் நடைபெறுகிறது.
லொகார்னோ78ல் ஆசிய திரைப்படங்கள் இரு உயரிய விருதுகளையும் வென்றன !
16.08.2025 முடிவடைந்த 78வது சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவின் உயரிய விருதான Pardo Or (தங்கச்சிறுத்தை) இனை, ஜப்பானிய திரைப்படம் Tabi to Hibi தட்டிச் சென்றது. இதன் இயக்குனர் Sho Miyake இதற்கான விருதை பெற்றுக் கொண்டார்.
ஜாக்கிசானின் வெற்றி இரகசியம் !
ஜாக்கிசானுக்கு (Jackie Chan) வயது 71. அவரது சினிமா வாழ்விற்கு இது 64 வது வருடம். எட்டு வயது முதல் சினிமாவில் பங்கு கொண்டுவரும் ஜாக்கி சான், 20 ஆம் நூற்றாண்டின் சினிமாக் கலாச்சாரத்தின் சின்னமாகவும், உலகின் மிக அடையாளம் காணக்கூடிய முகங்களில் ஒருவராகவும், ஆசிய சினிமா மற்றும் ஹாலிவுட் சினிமா இடையே ஒரு பாலமாகவும் விளங்குபவர்.
லோகார்னோ78' திரைப்படவிழாவின் 2ம் நாளிலும் GAZA துயரம் நினைவு கூரல் !
லோகார்னோ திரைப்பட விழாவின் 78 பதிப்பின் இரண்டாம் நாளாகிய ஆகஸ்ட் 07ந் திகதி மாலையிலும், பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தில் காசாவின் துயரம் நினைவு கூரப்பெற்றது.
காசாவிற்காக மனிதாபிமான ஆதரவுக் குரலுடன் ஆரம்பமாகியது லோகார்னோ78 திரைப்படவிழா !
லோகார்னோ78 திரைப்படவிழா நேற்று ஆரம்பமாகியது. இத் திரைப்படவிழாவின் சிறப்பம்சமான 'பியாற்சா கிரான்டே' பெருமுற்றத்தில், சம்பிரதாயபூர்வமான ஆரம்ப நிகழ்வு, சுருக்கமான, அதேவேளை காத்திரமான கருத்துக்களடங்கிய உரைகளுடன் தொடங்கியது.
99 உலக பிரீமியர்ஸ் திரைப்படங்களுடன் 78வது லோகார்னோ திரைப்பட விழா !
78வது லோகார்னோ திரைப்பட விழா, எதிர்வரும் 06.08.2025 புதன்கிழமை ஆரம்பமாகிறது. உலகெங்கிலும் உள்ள சுயாதீன சினிமாவிற்கான ஒரு பரந்த திரைவெளியாகவும், உலகின் பிரமாண்டத் திறந்தவெளித் திரையரங்கினைக் கொண்டதும், உலகின் முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றாகக் கவனம் பெறும் இத்திரைப்படவிழா, ஆகஸ்ட் 6-ந் திகதி முதல் 16 வரை, சுவிற்சர்லாந்தின் தென்பகுதியிலுள்ள லோகார்னோ நகரத்தில் நடைபெறவுள்ளது.
நியோன் 56 வது சர்வதேச ஆவணத் திரைப்படவிழா இன்று ஆரம்பம் !
சுவிற்சர்லாந்தின் பிரெஞ்பகுதியிலமைந்துள்ள நியோன் நகரில் வருடந்தோறும் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச ஆவணத் திரைப்பட விழா Visions du Réel .