சர்ச்சைக்குரிய எல்லையில் ஒரு வாரம் கடுமையான மற்றும் கொடிய மோதல்களைத் தொடர்ந்து, கத்தார் மற்றும் துருக்கியே மத்தியஸ்தம் செய்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
ரஷ்யாவின் எண்ணெயை இந்தியா வாங்காது என்று மோடி தனக்கு உறுதியளித்ததாக டிரம்ப் கூறுகிறார்
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தனக்கு உறுதியளித்ததாகவும், இது மாஸ்கோவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்துவதற்கான ஒரு "பெரிய படி" என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தார்.
வரி விதிப்பேன் என்ற அச்சுறுத்தலால் போர்கள் முடிவுக்கு வருகின்றன
இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட பல சர்வதேச போர்களை நிறுத்துவதற்கான கருவியாக வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தி வருகிறார்.
இஸ்ரேல் - காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
இஸ்ரேல்-காசா இடையேயான போர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன் மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது.
ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிக்கத் தொடங்கிய நிலையில் டிரம்ப் இஸ்ரேலுக்கு வந்தார்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் திங்கட்கிழமை (அக்டோபர் 13) ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டெல் அவிவ் நகரை வந்தடைந்துள்ளார்.
சீனா மீது கூடுதலாக 100% வரி விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் முதல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியாவுக்கு அறிவிப்பு - டிரம்ப் ஏமாற்றம்
2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.