வாழ்க்கை என்றால் சில சறுக்கலால் விழத்தான் செய்யும், விழ விழ ஒவ்வொரு முறையும் எழும்புகிறோமா? எவ்வளவு வேகமா எழும்புகிறோம்?
எழும்பும் போது எவ்வளவு முன்னோக்கி நிற்கிறோம்? என்பதை பொறுத்தே நமது வாழ்க்கை வரலாறாக மாறும் வாய்ப்பை நோக்கி நகரும். இதை மிக இயல்பாக அதே நேரம் அர்த்தத்தோடு எடுத்து காட்டி விடுகிறார் யோவான் பூர்ஷ்வா எனும் நடன கலைஞர்!
ஒரு மனிதன் படிக்கட்டுகளில் ஏறும் ஒரு காணொளி ஒன்று அண்மையில் பிரபலமாகியிருந்தது. உண்மையில், அவர் மீண்டும் மீண்டும் அவற்றிலிருந்து விழுந்து கொண்டே இருக்கிறார், ஆனால் பின்னர் மாயமாக மீண்டும் மேலே ஏறுகிறார், ஒரு நிலவில் எடை இல்லாமல் மிதந்து நடப்பது போல அமைவது அனைவரையும் கவர்ந்தது.
நம்மைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியாத உடல் சக்திகளான - ஈர்ப்பு, பதற்றம், தொங்கல் - மற்றும் அந்த சக்திகளுக்கு இடையிலான தொடர்பு, ஆகியவற்றைக் கொண்டு பூர்ஷ்வா இந்தப் படைப்பை கையாள்கிறார்.
பிரெஞ்சு நடன இயக்குனர் - 43 வயதான யோவான் பூர்ஷ்வா என்பவரின் நேரடி நிகழ்ச்சிகள்; பல ஆண்டுகளாக விழாக்களில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றன. இவரது இந்த படைப்பின் காணொளிகள் இணையத்தில் வெளியாகிவந்தவுடன் ஹாலிவூட் இசைக் கலைஞர்களான ஹாரி ஸ்டைல்ஸ், கோல்ட்ப்ளே, செலினா கோம்ஸ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் புதிய சந்தர்ப்பங்களை பெற்றுத்தந்துள்ளது.
source : theguardian