மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் பெயர் மாற்றத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மெஸ்சி ரசிகர் சந்திப்பில் கலவரம்
அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். 3 நாள் சுற்றுப்பயணத்தின்படி, இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு இன்று அதிகாலை வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.
2 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்தடைந்தார் ரஷிய அதிபர் புதின்
ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வந்தார். தலைநகர் டெல்லிக்கு வரும் புதினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கைக்கான வெள்ள நிவாரணப் பொருட்களை இந்திய வான்வெளி மூலம் அனுப்ப பாகிஸ்தானுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது.
பதட்டமான இருதரப்பு உறவுகளுக்கு மத்தியில், ஒரு குறிப்பிடத்தக்க மனிதாபிமான நடவடிக்கையாக, புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிகளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் நிவாரண விமானங்கள் அதன் வான்வெளியைக் கடக்க இந்தியா திங்கட்கிழமை அனுமதி அளித்ததாக WION செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க சனிக்கிழமை சாமி தரிசனம் மேற்கொண்டார்.
துபாய் விமானக் கண்காட்சியில் இந்தியப்போர் விமானம் விபத்தில் சிக்கியது
துபாய் விமான கண்காட்சியில் இன்று வெள்ளிக்கிழமை இந்தியப்போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் விமானி இறந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் - பக்தர்கள் பரிதவிப்பு !
சபரிமலை மண்டல விரதம் ஆரம்பித்த முதல் 2 நாட்களில் 3 இலட்சம் பேர் கூடியதில் பெரும் நெரிசல். கட்டுக்கடங்காமல் கூட்டம் சேர்ந்ததால், உணவு, நீர், கழிப்பறை, போன்ற வசதிகள் கிடைக்காமல், பலரும் அவதி.