counter create hit நாளும் நல்ல செய்தி

லண்டன் சதுப்புநில மையம் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தைத் தணிக்க உதவும் சிகிச்சையாக இயற்கை அழகை மையமாகக் கொண்ட படிப்புகளை நடத்துகிறது.சமீபகாலமாக பெருந்தொகையான மக்களின் மன ஆரோக்கியம் பாதிப்படைந்து வருகிறது. 

போலந்து நாட்டின் அங்காடி கடை அலமாரிகளில் கெதியில் கலாவதியாகும் உணவுப்பொருட்கள் வாங்கப்படாமல் இருந்தால் அதன் விலைகள் தானாக குறைக்கப்படுகிறது.

உலகப் பெருதொற்றிலிருந்து வெளிவரும் பல்வேறு செய்திகள் உலக மக்களை பெரும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்வது பெரிய சவாலாகவும் தென்படத்தொடங்கியதுள்ளது. அதிலிருந்து கடந்துவந்தவர்களுக்காகவும், கடந்து வருபவற்காகவும், நாளும் ஒரு நல்ல செய்தி.

இந்த பூமி உள்ளே அனற்குழம்பில் தகித்துக்கொண்டிருக்கிறது. தன்னுடைய தகிப்பினை மறைத்துக்கொண்டு, கடலும், காற்றும், காடும், மலையும், நதியும் என நந்தவனமாய் இயற்கையை இன்பமாக அள்ளிச் சொரிகிறது.