free website hit counter

கடந்த 24 மணி நேரத்தில் 3,000 மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர் - ஆபரேஷன் கங்கா

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர்.
ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதற்கிடையே, ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து இந்திய விமானப்படையின் சி-17 ரக போர் விமானம் மூலம் மேலும் 210 இந்தியர்கள் நேற்று இரவு டெல்லி வந்தடைந்தனர். டெல்லி வந்தடைந்த இந்தியர்களை பாதுகாப்புத்துறை இணை அதிகாரி அஜய் பட் வரவேற்றார். 

இந்நிலையில், இதுவரை உக்ரைனை விட்டு 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேறி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 15 விமானங்கள் மூலம் 3,000 மாணவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் 18 விமானங்களில் இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். இந்திய விமான படையின் 3 சி-17 விமானங்கள் மற்றும் ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், கோ பர்ஸ்ட் மற்றும் கோ ஏர் உள்ளிட்ட பிற வர்த்தக விமானங்கள் வழியே அவர்கள் மீட்கப்படுவார்கள் என  மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction