free website hit counter

டெல்லியில் ராணுவ உயர் அதிகாரிகளின் மாநாடு இன்று தொடங்குகிறது

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ராணுவ உயர் அதிகாரிகள் மாநாடு, ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்படுகிறது. ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் இவை நடைபெறும்.
ராணுவ உயர் அதிகாரிகள் மாநாடு, ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்படுகிறது. ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் இவை நடைபெறும். பாதுகாப்புத்துறை, ராணுவ விவகாரங்கள் துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்த இது நல்ல வாய்ப்பாக அமைகிறது. ராணுவத்தில் முக்கியமான கொள்கை முடிவு எடுப்பதற்கு இந்த மாநாடு வழிவகுக்கிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ராணுவ உயர் அதிகாரிகளின் மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. 22ஆம் திகதிவரை, 5 நாட்கள் இம்மாநாடு நடைபெறும். ராணுவ தளபதி எம்.எம்.நரவானே தலைமை தாங்குகிறார். அவர் இம்மாதம் ஓய்வு பெறுவதால், அவர் பங்கேற்கும் கடைசி மாநாடு இதுவே ஆகும்.

ராணுவத்தின் தயார்நிலையை அதிகரிப்பது குறித்தும், ராணுவத்தின் திறன் மேம்பாட்டை வளர்ப்பது பற்றியும், எல்லையில் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. ராணுவத்துக்கு மின்சார வாகனங்கள் வாங்குவது உள்ளிட்ட நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction