free website hit counter

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மூலம் இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா - 39 பேருக்கு தொற்று

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சீனாவில் 'ஜீரோ கோவிட் பாலிசி' என்ற பெயரில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளை ஜின்பிங் அரசு விலக்கிக்கொண்டுவிட்டதைத் தொடர்ந்து, அங்கு தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது.
பல நகரங்களிலும் ஆஸ்பத்திரிகள், கொரோனா நோயாளிகளால் நிரம்புகின்றன. கொரோனா பலிகளும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. இது உலக நாடுகளையெல்லாம் அதிர வைத்துள்ளது.

ஒமைக்ரான் வைரசின் புதிய வகை பரவல் வேகம் எடுத்ததால் சீனா நாடு திணறி வருகிறது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பல நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.

அந்த வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவும் பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது செய்துள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.அந்த வகையில், வெளிநாடுகளில் இருந்து வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 6 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிகிறது. கொரோனா உறுதியான 39 பேரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு பிஎப்-7 ரக கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய மரபணு சோதனை முறை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்ட்வியா, விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை ஆய்வு செய்ய உள்ளார். அப்போது, டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு ஒரு முக்கியமான கால கட்டம் என சுகாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், முந்தைய பாதிப்புகளை மேற்கொள்காட்டி, இந்த நாட்களில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: