free website hit counter

மராட்டிய மாநில உள்துறை மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் நியமனம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மராட்டிய முதல் மந்திரியாக பதவியேற்று 7 வார காலமாகிய நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மராட்டிய மாநில அரசின் மந்திரிசபை விரிவாக்கம் நடந்தது. அதில் 18 பேர் மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், எந்தெந்த துறை யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அறிக்கையை இன்று மராட்டிய முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டது.

உள்துறை மற்றும் நிதியமைச்சகத்தை, துணை முதல் மந்திரியாக உள்ள மராட்டிய மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான தேவேந்திர பட்னாவிசுக்கு வழங்கி தன் விசுவாசத்தை நிரூபித்துள்ளார் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே.

மேலும், பாஜகவை சேர்ந்த ராதாகிருஷ்ண விகே பாட்டீல் புதிய வருவாய் மந்திரியாகவும், சுதிர் முங்கந்திவார் வனத்துறை மந்திரியாகவும், சந்திரகாந்த் பாட்டீல் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி மந்திரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக அவர் நாடாளுமன்ற விவகாரங்களையும் கவனிப்பார்.

ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனாவில் இருந்து தீபக் கேசர்கர் பள்ளிக் கல்வித் துறையின் மந்திரியாகவும், அப்துல் சத்தாருக்கு வேளாண்மைத் துறை மந்திரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட மேலும் 11 அமைச்சகங்கள் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கும், தேவேந்திர பட்னாவிஸ் திட்ட அமைச்சகத்தையும் கூடுதல் பொறுப்பாக கையாளுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: