free website hit counter

முதற் கட்டமாக 2.5 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
உயர்கல்வியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. உயர்கல்வியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி மாணவிகள் தங்களுடைய விவரங்களை பதிவு செய்தனர். சமீபத்தில் இதற்கான நிதியையும் ஒதுக்கி தமிழக அரசு, அரசாணையாக வெளியிட்டது.

இந்தநிலையில் முதற் கட்டமாக 2.5 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படிப்படியாக இதன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: