free website hit counter

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் திகதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள், 15  இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

   வார்டு வாரியாக வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் சுற்று முடிவு, முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு தெரிய வரும்.

  மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் திமுக கூட்டணி 4 இடங்களில் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 14 இடங்களில் முன்னிலையில் உள்ளன.  

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction