free website hit counter

கணிதம் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து தற்போது நடைபெற்று வரும் அரசாங்க பாடசாலை தவணை பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.

க.பொ.த (சா/த) 2023 பரீட்சைகள் 2024 மே 06 முதல் 15 வரையிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் 2024 செப்டம்பர் 15 மற்றும் க.பொ.த (உ/த) 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2024 பெப்ரவரி 29 வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா 4.4% அதிகரித்தது.

லிட்ரோ உள்நாட்டு எல்பி எரிவாயு மீதான மார்ச் மாதத்திற்கான விலை திருத்தம் எதுவும் இடம்பெறாது என Litro Gas Lanka அறிவித்துள்ளது.

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு (GOR) 2024 ஜனவரி இறுதிக்குள் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக தொடர்ந்து முன்னேற்றமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வெற்றிடமாக உள்ள கிராம சேவையாளர் பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான திகதி செப்டம்பர் 18 மற்றும் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்கு இடையில் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …