free website hit counter

செளபாக்கிய கெளரி விரதம்

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

செளபாக்கியங்கள் யாவும் எப்போதும் நிறைந்து இருக்கவேண்டும் என்றே இப்பூவுலகில் வாழும் அனைவரும் விரும்புவர். அப்படிப்பட்ட செளக்கியத்தை வாரி வளங்கி ஆனந்தம் அளிப்பவர் எமது அன்னை.

ஆம் இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை.. அம்மா வீட்டில் இருந்தால் எல்லாம் வீட்டில் இருக்கும். அதுபோல் இல்லாது இருப்பவர்க்கும் அகிலத்தை ஆளும் அகிலாண்டேஸ்வரி அன்னை எம் உள்ளத்தில் குடிகொண்டிருந்தால் எல்லாம் இருக்கும். இதற்காகவே என்றும் குறைவில்லாத நிறைவோடு வாழ்தலுக்கு அம்பிகை அருள் வேண்டும். அதற்கு நாம் என்ன செய்யலாம் அம்பிகையானவள் ஆதிபரசக்தியாக, அகிலலோகநாயகியாக ,
காஞ்சிகாமாட்சியாக மதுரை மினாட்சியாக, காசிவிசாலாட்சியாக, ஜகதாம்பிகையாக, அபிராமியாக, கருமாரியம்மனாக, கன்னியா குமரியாக, கனகதுர்க்கையாக, சரஸ்வதியாக, மகாலஸ்மியாக, கெளரியாக உமாபார்வதியாக இப்படி பல்வேறு உருவங்கள் தாங்கி பாரத சேத்திரத்திலும் உலகெங்கிலும் வீற்றிருக்கிறார்.

பக்தர்கள் அவர்கற்கு ஏற்ப வேண்டியதை வேண்டுவார்க்கு அருள அன்னை ஆயிரம் நாமங்கள் கொண்டு விளங்குகிறாள். மானிடப்பிறவி எடுத்த அனைவருமே வினையினால் வேதனைப்படிபவர். அதுதான் கர்ம வினை எனப்படுவது. இக்கர்மவினை வெல்லப்படுமானால் பிறவிகள் தோன்றாது. அதற்காகவே ஆன்மா தெளிவு பெறவேண்டும். அதற்குரிய சக்தியை அளிக்கும் அன்னையை விரத வழிபாடுகளால் மகிழ்வுறச் செய்வதன் மூலம் நம் ஆன்மா தெளிவு பெற்று உய்வடையும்.

எல்லாவித செலபாக்கியங்களையும் தரும் அம்மையை அபிராமிப்பட்டர் துதி பாடுகிறார். அபிராமிப்பதிகத்தில் பதினாறு பேறுகளும் ஒருமனிதன் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்கிறார்.

அவை கலையாத கல்வி, குறையாத வயது, கபடில்லா நட்பு, கன்றிடாத வளம், குன்றிடா இளமை, பிணியிலா உடல், சலியாத மனம், அன்புள்ள மனைவி, சந்தானம்(குழந்தைப்பேறு) , குறையாப்புகழ், மாறாதவார்த்தை(வாக்கு), தடையில்லா கொடை, நிலைத்த நிதி, வளையாதஅரசாட்சி, துன்புறா வாழ்வு, இறைபத அன்பு, தொண்டரோடு கூட்டு இப்பதினாறு பேறும் பெற இறைவியிடம் இடையறா அன்பு கொண்டு தெய்வ வழிபாடுகள் ஆற்ற வேண்டும்.

இறைவனும் இறைவியும் சேர்ந்தே இருப்பதை பூரணத்துவம் எண்கிறோம். ஆற்றைல் உடையவனை விட்டு அவன் ஆற்றலை பிரிக்க முடியாது. அக்னியும் சூடும் போல சூரியனும் சுடரொளியும் போல், சந்திரனும் குளிரொளியும் போல் இருவரும் ஒன்றாய் கலந்திருப்பவர்கள், ஒரே வஸ்துவில் இரு பரிமாணங்கள் பூரணபரப்பிரம்மங்களாக ஶ்ரீ சக்கரத்தில் என்றும் கலந்து நிலைத்திருப்பவர்கள், இந்த செளபாக்கிய விரத நாளில் முப்புரையாக விளங்கும் துர்க்கை இலஸ்மி சரஸ்வதி இவர்களின் மும்மூர்த்திகளாக விளங்கும் பிரம்மா, விஸ்ணு உருத்திரன் இவர்களையும் தியானித்து மந்திர யந்திர,தந்திர வழிபாடுகளால் பூஜிக்க எல்லாவித மங்களங்களும் கிடைக்கும். உன்னை நினைந்தர்க்கு சௌக்கியம், உன்னை வணங்குபவருக்கு பாக்கியம்!

''சர்வமங்கள மாங்கல்யே சிவே சர்வாத்தசாதிகே சரண்யே திரியம்பிகே
கெளரி நாராயணி நமோஸ்துதே ஜெய நாராயணி நமோஸ்துதே" 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction