free website hit counter

அவுஸ்திரேலியா மகளிர் அணி 6 ஆவது தடவையாக டி20 உலக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
8வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் கடந்த 10ம் தேதி தொடங்கியது.
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று தென்ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 156ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய பெத் மூனே 53பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார்.அலிசா ஹீலி 18 ரன்களும் , ஆஷ்லே கார்ட்னர் 29ரன்களும் எடுத்தனர் . தென் ஆப்பிரிக்கா சார்பில் ஷபின் இஸ்மாயில் ,மரிசான் கேப் ஆகியோர்2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.தொடர்ந்து 157ரன்கள் இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடியது.

இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீராங்கனை லாரா வால்வார்ட், ஆஸ்திரேலிய பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் குவித்தார். மறுமுனையில் டாஸ்மின் பிரிட்ஸ் 10 ரன்கள், மரிசான் கேப் 11 ரன், கேப்டன் சுனே லஸ் 2 ரன் என விரைவில் விக்கெட்டை இழந்தனர். அதிரடி காட்டிய லாரா வால்வார்ட் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரது விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அவரைத் தொடர்ந்து சோல் டிரையான் 25 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அனெக் போஸ்ச் 1 ரன் மட்டுமே அடித்தார். கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவை என்ற நிலையில், 7 ரன்களே எடுத்தது.

கடைசி வரை போராடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இதன் மூலம் மகளிர் டி20 உலகக் கோப்பையை 6 முறை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

ஆட்டநாயகியாக பெத் மூனியும் மற்றும் தொடர்நாயகியாக ஏஷ்லி கார்ட்னரும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: