free website hit counter

"ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் குடும்பங்களை ட்ரோல் செய்வதை நிறுத்துங்கள்" என்று இந்திய ஜாம்பவான் வேண்டுகோள்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை விமர்சிப்பதை தவிர்க்குமாறு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை விமர்சனம் செய்வது குறித்த செய்திகள் முற்றிலும் மோசமான சுவையில் இருப்பதாக ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் சிங், ‘X’ தளத்தில் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் நன்றாக விளையாடினோம், ஆனால் ஆஸியின் சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தினால் இறுதிப் போட்டியில் தோற்றோம். அவ்வளவுதான். வீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் ஏன் ட்ரோல் செய்ய வேண்டும்? இதுபோன்ற நடத்தையை நிறுத்துமாறு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன். நல்லுறவு மற்றும் கண்ணியம் மிகவும் முக்கியமானது. ” என்று அவர் மேலும் கூறினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பல குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்ற டிராவிஸ் ஹெட், பல்வேறு தரப்பினரால் ஆன்லைனில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டதை அடுத்து ஹர்பஜனின் கருத்துக்கள் வந்துள்ளன.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: