free website hit counter

"கோபா அமெரிக்கா 2021" இறுதி போட்டியில் ஆர்ஜென்டினா !

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கோபா அமெரிக்கா 2021 கால்பந்து தொடரின் 2வது அரையிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு ஆரம்பித்தது. 2வது அரையிறுதியில் ஆர்ஜென்டினா - கொலம்பியா அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்க நிமிடத்தில்(7') ஆர்ஜென்டினா அணியின் லவ்டரோ மார்டினேஷ் கோலை அடித்தார். அதன் பிறகு ஆட்டத்தின் அரை இறுதி நேரம் வரை கோல்கள் ஒன்றும் இரு அணியும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் அரையிறுதி இடைவெளியின் பின் கொலம்பியா அணியின் லுயிஸ் டயஸ் கோலை(61') அடித்தார்.அதன் பின் விறுவிறுப்பாக ஆட்டம் தொடர்ந்தது.90 நிமிட முடிவில் இரண்டு அணியும் சமநிலையில் இருந்தமையினால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

மேலதிக ஆட்ட நேரத்தின் போதும் இரண்டு அணிகளும் தங்களின் பலத்தைக் கொண்டு கோல்களை அடிக்க முயன்றது.ஆனால் கொடுக்கப்பட்ட மேலதிக நிமிடத்தில் இரண்டு அணியும் கோல் அடிக்காத நிலையில் பெனால்டி சுற்றுக்கு வந்தடைந்தது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த பெனால்டி சுற்றில் ஆர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமி மார்டினேஷ் தனது அசுர கீப்பிங் திறமையால் ஆர்ஜென்டினா அணி 3-2 என்ற பெனால்டி மூலம் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவானது. வரும் 11ம் திகதி பிரேசில் மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் இறுதி போட்டியில் மோதவுள்ளன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction