free website hit counter

3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ருத்ராஜ் கெய்க்வாட் 57 ரன்னும், இஷான் கிஷன் 54 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 31 ரன் எடுத்தார்.

இதையடுத்து, 180 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. கேப்டன் பவுமா 8 ரன், ஹென்ரிக்ஸ் 23 ரன், பிரிடோரியஸ் 20 ரன்னிலும் அவுட்டாகினர். வான் டெர் டுசன் ஒரு ரன்னில் வெளியேறினார். கிளாசன் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 141 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், சஹல் 3 விக்கெட்டும், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக சஹல் தெரிவாகினார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: