உலக பாரா-பேட்மிண்டன் போட்டியில் 2019 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றவர் இந்தியாவின் மானசி ஜோஷி. 32 வயதான இவர் மென்பொருள் பொறியாளராக இருந்து பின்னர் பேட்மிண்டன் வீராங்கனையாக மாறியவர்.
இவர் சமீபத்தில் நடந்து முடிவடைந்த ஸ்பெயின் இன்டர்நேஷனல் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கத்தையும், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் மேலும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றார்.
இதன் மூலம் பெண்களுக்கான உலக பாரா-பேட்மிண்டன் தரவரிசையில் இவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதே நேரத்தில் ஆண்களுக்கான பாரா-பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் பிரமோத் பகத் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.