free website hit counter

ஹாக்கி தரவரிசையில் இந்தியா 4-வது இடத்துக்கு முன்னேற்றம்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்திய அணி இரு இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆடவருக்கான ஹாக்கி தரவரிசை பட்டியலில் இந்திய அணி இரு இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் புரோ ஹாக்கி லீக்கில் இந்திய அணியானது ஜெர்மனி, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்தது. இதனால் தரவரிசை பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

உலக சாம்பியனான ஜெர்மனி அணி இந்தியாவிடம் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால் முதலிடத்தை இழந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

உலகக் கோப்பை தொடரில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றிய நெதர்லாந்து முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற பெல்ஜியம் 2-வது இடம் வகிக்கிறது.

புரோ ஹாக்கிலீக்கில் அடுத்தடுத்த இரு தோல்விகளால் ஆஸ்திரேலிய அணி ஒரு இடத்தை இழந்து 5-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction