free website hit counter

கேரளாவை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது ஐதராபாத் - ஐ.எஸ்.எல்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கோவாவில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி - ஐதராபாத் எப்.சி. அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் போடவில்லை. 2வது பாதியில் கேரள வீரர் ராகுல் 68-வது நிமிடத்திலும், ஐதராபாத் வீரர் சஹில் தவோரா 88-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதையடுத்து 1-1 என்ற கோல் கணக்கில் ஆ,ட்டம் சமனில் முடிந்தது. 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதன் முடிவில் ஐதராபாத் அணி 3-1 என்ற கணக்கில் கேரளாவை தோற்கடித்து முதல்முறையாக ஐ.எஸ்.எல். சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 18 கோல்கள் அடித்து முதலிடம் பிடித்த ஐதராபாத் வீரர் ஒக்பெச்சேவுக்கு தங்க ஷூ விருது வழங்கப்பட்டது
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: