free website hit counter

வான் டெர் டுஷன் மற்றும் டேவிட் மில்லர் அதிரடி - இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.
அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி, டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 76 ரன்கள் குவித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 31 ரன்கள், ரிஷப் பண்ட் 29 ரன்கள் சேர்த்தனர்.

இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் அதிரடி காட்டிய பிரிட்டோரியஸ், 29 ரன்களில் வெளியேறினார். குயின்டன் டி காக் 22 ரன்களே சேர்த்தார்.

அதன்பின்னர் வான் டெர் டுஷன்-டேவிட் மில்லர் ஜோடி, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினர். பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட இந்த ஜோடி, விரைவாக அரை சதம் கடந்ததுடன், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.வாண்டர் டூ சென் 46 பந்துகளில் 75 ரன்களும், டேவிட் மில்லர் 31 பந்துகளில் 64 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 19.1 பந்துகளில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 212 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

இப்போட்டியில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: