டயலொக் SLC அழைப்பு T20 தொடரின் சம்பியன் கிண்ணத்தை கிரேய்ஸ் அணி கைப்பற்றியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற SLC கிரேய்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
கிரேய்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்தப்போட்டித்தொடரில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும், இது பதிவாகியது.
பின்னர், மிகப்பெரிய வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ரெட்ஸ் அணி, 19.4 ஓவர்கள் நிறைவில், சகல விக்கெட்டுகளையும், இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டயலொக் SLC அழைப்பு T20 வெற்றிபெற்ற கிரேய்ஸ் அணிக்கு, 2 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டதுடன், இரண்டாவது இடத்தை பிடித்த ரெட்ஸ் அணிக்கு 1.5 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. அத்துடன், தொடர் ஆட்டநாயகன் விருதை வென்ற தசுன் ஷானகவுக்கு 2 இலட்சம் ரூபா பரிசுத்தொகையாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    