free website hit counter

மீண்டெழும் இலங்கை கிரிக்கெட்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எதிர்வரும் உள்வாரி சுற்றுப்பயணங்கள், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை  ஆகிய கிரிக்கெட் போட்டிகளுக்குத் தயாராகும் வகையில்,

26 பேர் கொண்ட 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய பயிற்சி அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்தது.


இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுவதாவது " இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தால் நடத்தப்படும் நாடளாவிய திறமை விவரக்குறிப்பு திட்டத்தின் மூலம் 75 வீரர்களை அடையாளம் கண்டு அதில் சிறந்த 26 வீரர்களை கொண்ட குழுவை தெரிவு செய்யப்பட்டது". பாடசாலை கிரிக்கெட் சங்கம் மற்றும் மாகாண கிரிக்கெட் சங்கங்களுடன் இணைந்து திறமை விவரக்குறிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

26 வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, 75 வீரர்கள் கண்டியில் ஒரு உள்ளக பயிற்சி திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் திறன் பயிற்சி, விளையாட்டு கல்வி, உடற்பயிற்சி செயலமர்வுகள் மற்றும் பல பயிற்சி கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்றன.

உள்ளக  பயிற்சித் திட்டத்தில் பங்கேற்ற 75 வீரர்கள், கொழும்பு (வடக்கு மற்றும் தெற்கு), தம்புள்ளை, காலி மற்றும் கண்டி ஆகிய ஐந்து மாகாணங்கள் பெயரில் அணிகளாக பிரிக்கப்பட்டனர்.

தேசிய தேர்வுக் குழுவின் உறுப்பினர்கள், உள்ளக  பயிற்சித் திட்டத்தின் எல்லா சமயங்களிலும் ஒவ்வொரு தனி வீரரையும் கூர்ந்து கவனித்தனர் என இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்தது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction