free website hit counter

இலங்கை அணியின் புதிய தலைவராக தசுன் சானக

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை அணியின் புதிய தலைவராக சகலதுரை ஆட்டக்காரர் தசுன் சானக தெரிவாகியுள்ளார். ஆகவே எதிர்வரும் இந்தியாவுடனான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இவரே இலங்கையணிக்கு தலைவராக செயற்படுவார்.

நடந்து முடிந்த பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்துடனான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு குசல் பெரெரா அணித்தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். அவற்றில் 9 போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வியை தழுவியது. ஆகவே இலங்கையணியின் தெரிவுக்குழு குசல் பெரெராவின் இயல்பான துடுப்பாட்டத்தை பாதிப்பதினால் அவரை அணித்தலைவர் பதவியிலிருந்து விடுவித்து புதிய அணித்தலைவராக தசுன் சானகவை நியமித்துள்ளது.

தசுன் சானக 2019 இல் பாகிஸ்தானில் பாகிஸ்தானுடனான டி20 சுற்றுப்போட்டியில் 3-0 என்ற கணக்கில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தானை இளம் வீரர்களை கொண்ட இலங்கையணியுடன் வீழ்த்தினார். இம்மாதம் 13, 16, 18 எனும் தினங்களில் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் 21,23,25 எனும் தினங்களில் மூன்று டி20 போட்டிகளிலும் ஆர் பிரமதாச விளையாட்டரங்கில் இலங்கையணி விளையாடவுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction