free website hit counter

ICC இன் மே மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ், மே மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பிரகாசிப்புகளை வழங்கிவரும் வீரர்களை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) கௌரவித்து வருகின்றது.

அதன்படி கடந்த மே மாதத்திற்கான சிறந்த வீரர்களாக இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ், அசித பெர்னாண்டோ மற்றும் பங்களாதேஷ் அணியின் முஷ்பிகூர் ரஹீம் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இதில் வாக்குகள் மூலம் ஒருவர் சிறந்த வீரராக அறிவிக்கப்படுவார்.

அதன்படி, ஏஞ்சலோ மேத்யூஸ் மே மாதத்திற்காக சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அஞ்செலோ மெதிவ்ஸ் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 சதங்களை விளாசியிருந்தார். குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் 199 ஓட்டங்களையும், இரண்டாவது டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

ஐசிசியின் இந்த கௌரவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஏஞ்சலோ மேத்யூஸ், “இந்த வாய்ப்பை நினைத்து நான் பெருமைப்படுவதுடன், என் மீது நம்பிக்வை வைத்திருக்கும் அணி வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை கூறிக்கொள்கிறேன். அத்துடன் இந்த கௌரவத்தை எப்போதும் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கும் இலங்கை ரசிகர்களுக்காக அர்ப்பணிக்கிறேன்” என்றார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: