free website hit counter

தலதா மாளிகையுள் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தலதா மாளிகையின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ராஜா வீதி வழியாக தலதா மாளிகை வளாகத்திற்குள் இன்று (18) பிற்பகல்
நுழைந்த கண்டி மாநகர சபைக்கு சொந்தமான குப்பை வண்டியில் இருந்து T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 32 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, குப்பை வண்டியின் சாரதி மற்றும் உதவியாளர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த லொறி தலதா மாளிகை வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது லொறியில் சிறிய உரப்பையில் வெடிமருந்து உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்கவின் மேற்பார்வையில், பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ. சேனாதீர உள்ளிட்ட குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: