free website hit counter

400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் இரத்து

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சுற்றுலா வீசாவில் ஆட்களை அனுப்பிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து.
சுற்றுலா விசாவில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, அது தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்கத் தவறிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தொழில் மற்றும் வௌிநாட்டு அமைச்சின் விவகாரங்கள் தொடர்பில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

அத்துடன், நாட்டிற்கு அனுப்பப்படும் டொலரை உண்டியல் முறை மூலம் பெற்றுக்கொண்டு உரியவர்களுக்கு வழங்கும் நிறுவனங்களுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனுமதிப் பத்திரத்திற்கான கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction