free website hit counter

ஊரடங்கு ஒக்டோபர் 1 வரை நீடிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன்னர் இந்த தகவலினை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இது குறித்து அவர் தனது டுவிட்டரில் "நிபந்தனை லாக் டவுன் (01/10) வரை தொடரும்.  இருப்பினும், பொருளாதாரத்தை பாதிக்கும் அரசு அத்தியாவசிய சேவைகள் செயல்பட அனுமதிக்கப்படும். நிபந்தனைகள் விரைவில் அறிவிக்கப்படும். தயவுசெய்து விதிமுறைகளை கடைபிடிக்கவும், இந்த நேரத்தை தடுப்பூசிகலை பெற்றுக்கொள்ள பயன்படுத்தவும்,
#ஸ்டேஹோம் & #WearAMask'' என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction