free website hit counter

மவுஸாகலை நீர்தேக்கத்தினை சுத்தப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மவுஸாகலை நீர்தேக்கத்தில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி
அணைக்கட்டை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.

மவுஸாகலை நீர்தேக்கத்தின் நீர் பாசன பொறியியலாளர்களால் கடந்த 2 ஆம் திகதி முதல் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

இந் நிலையில், கெனியோன் மின் உற்பத்தி நிலையத்தில் கடந்த இரண்டாம் திகதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் தேசிய மின் உற்பத்திக்கு 60 மெகா வோட் மின்சாரம் இல்லாது போயுள்ளது.

மத்திய மலை நாட்டில் உள்ள பெரும் பாலான குளங்கள் சுத்தப்படுத்தப்படாமையாலும், போதியளவு மழை வீழ்ச்சி கிடைக்காமையாலும் நீர் மின் உற்பத்தி வெகுவாக குறைவடைந்து வருகின்றது. குறிப்பாக 25 வீதத்தால் மின் உற்பத்தி குறைந்துள்ளது. இவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு தீர்வாக தற்போது இடைக்கிடையே மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந் நிலைமையை கருத்தில் கொண்டு மவுஸாகலை நீர் தேக்கத்தில் இருந்து கெனியோன் வரை நீரை கொண்டுச் செல்லும் சுரங்க பாதையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை  மவுஸாகலை நீர்தேக்க நீர் பாசன பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு நீர்பாசன சுரங்க பாதையும் 10 வருடத்திற்கு ஒருமுறை சுத்தப்படுத்த வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் கெனியோன, பொல்பிட்டிய சமனல நீர் தேக்கங்களில் வேறு சுரங்க பாதையை பாவித்து மின் உற்பத்தி நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: