free website hit counter

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவசரகால மருந்துக் கொள்வனவுகளை சுகாதார அமைச்சு இடைநிறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை (02)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவசரகால கொள்முதலுடன் தொடர்புடைய சிக்கல்களின் விளைவாக குறித்த செயல்முறை குறித்து தவறான எண்ணங்கள் ஏற்பட்டமை குறித்தும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மருந்து கொள்வனவுகளின் அவசரநிலை இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், தொற்றுநோய் போன்ற ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், மீண்டும் இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் எனவும் தற்போது சுமார் 170 முதல் 200 வரையான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டில் அண்மைய காலமாக மருந்து பொருட்களின் தரம் குறித்த சிக்கல் எழுந்த நிலையில் குறித்த மருந்துகள் அவசர கால கொள்வனவின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமையே அதற்கு காரணம் என கண்டறியப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction