free website hit counter

கடைகளில் பொருட்களின் விலைகளை தெளிவாக காட்சிப்படுத்த வேண்டும் - நிதியமைச்சர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் பொது மக்களை மிகவும் வெளிப்படையான
முறையில் சென்றடையும் வகையில் பயனுள்ள பொறிமுறையை உருவாக்குவது அவசரத் தேவை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு உறுதி செய்வதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் கன்னி கூட்டத்தில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

தற்போது பால் மா, எல்பி எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து போன்ற நான்கு அத்தியாவசியப் பொருட்களுக்கு சிறிய தட்டுப்பாடு காணப்பட்டாலும், ஏனைய அனைத்து பொருட்களுக்கும் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், கடை உரிமையாளர்கள் தாம் விரும்பியவாறு விலையை தீர்மானிக்கும் போக்கு காணப்படுவதால், கடைகளில் பொருட்களின் விலைகளை தெளிவாக காட்சிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: