free website hit counter

தொடருந்து இயக்குநர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு காரணமாக தொடருந்து சேவைகள் பாதிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பணிப்புறக்கணிப்பு காரணமாக 10இற்கும் மேற்பட்ட தொடருந்து சேவைகள் பாதிப்பு!
தொடருந்து இயக்குநர்கள் சங்கம் நேற்று (11) நள்ளிரவு முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினத்தின் (12) இதுவரையான காலப்பகுதியில் 10இற்கும் அதிகமான அலுவலக மற்றும் ஏனைய தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் 5 வருடங்களாக தாமதமாகிவரும் தரம் உயர்வை விரைவுபடுத்துமாறு கோரி வந்த போதிலும், அதற்கான உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்றிரவு தொடருந்து இயக்குநர்கள் சங்கத்திற்கும், தொடருந்து முகாமையாளருக்கும் இடையில் அவசர பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தமையினால், நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு தொடருந்து இயக்குநர்கள் சங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: