free website hit counter

அப்பாவி பெண்ணை காவு வாங்கிய இராணுவ வீரரின் துப்பாக்கி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தெமட்டகொடவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஆயுதம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நேற்று (13) இரவு தெமட்டகொடவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஆயுதம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாரால் இலங்கை இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேஸ்லைன் மாவத்தையில் ஹல்கஹகும்புர பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரண்டு இராணுவ சிப்பாய்களும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது, தவறுதலாக ஒரு துப்பாக்கின் குண்டு குறித்த பெண்ணை தாக்கியுள்ளது கூறப்பட்ட்து. பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: