free website hit counter

உலகுக்கு 1 பில்லியன் கோவிட் தடுப்பூசி வழங்க G7 நாடுகள் முடிவு

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

47 ஆவது G7 நாடுகளுக்கான உச்சி மாநாடு இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி ஞாயிறு வரை பிரிட்டனில் நடைபெறுகின்றது.

இந்நிலையில் இந்த அமைப்பின் தலைவர்கள் உலகளாவிய கோவிட் தடுப்பூசி திட்டத்தை விரிவு படுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் குறைந்தது 1 பில்லியன் டோஸ் தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு, பகிர்ந்தளிக்கவும், விற்பதற்கும் ஆயத்தமாக இருப்பதாகவும் வியாழக்கிழமை பிரிட்டன் அறிவித்துள்ளது.

உலகின் 92 வறிய மற்றும் வருமானம் குறைந்த நாடுகளுக்கு கிட்டத்தட்ட 500 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளைப் பகிர்ந்தளிப்பதாக அமெரிக்க அறிவித்ததன் பின் உடனடியாக பிரிட்டனின் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதே போல் பிரிட்டனும் தடுப்பூசிகள் தேவை அதிகமுள்ள நாடுகளுக்கு அடுத்த வருடத்துக்குள் 100 மில்லியன் தடுப்பூசிகளை நன்கொடை அளிக்கவும், இன்னும் சில வாரங்களுக்குள் 5 மில்லியன் தடுப்பூசிகளை அளிக்கவும் முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

முன்னதாக தன் சொந்தத் தேவைக்காக 400 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை பிரிட்டன் கோரியிருந்ததை அடுத்து வறிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை அவசரத் தேவைக்கு கூட நன்கொடை அளிக்கத் தவறி விட்டது என விமரிசனம் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஜப்பானில் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இன்னமும் 6 கிழமைகளே உள்ளன. இந்நிலையில் அங்கு பொது மக்களுக்கு கோவிட் தடுப்பூசிகளை செலுத்தும் பணியை ஜப்பான் அரசு தீவிரப் படுத்தி வருகின்றது. 2011 சுனாமி அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப் பட்ட டோக்கியோவுக்கு வடக்கே உள்ள ஸோமா என்ற நகரில் பொது மக்களுக்கு தடுப்பூசிகளைப் பகிர்ந்தளிப்பதில் சுனாமியால் கற்றுக் கொண்ட பாடங்களைப் பயன்படுத்தி அந்த நகர நிர்வாகம் செயற்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 175 646 938
மொத்த உயிரிழப்புக்கள் : 3 789 644
குணமடைந்தவர்கள் : 159 510 038
ஆக்டிவ் தொற்றுக்கள் : 12 347 256
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 84 563

நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 34 275 783 : மொத்த உயிரிழப்புக்கள் : 614 007
இந்தியா : 29 274 823 : 363 097
பிரேசில் : 17 215 159 : 482 135
பிரான்ஸ் : 5 729 967 : 110 270
துருக்கி : 5 313 098 : 48 524
ரஷ்யா : 5 180 454 : 125 674
பிரிட்டன் : 4 542 986 : 127 867
இத்தாலி : 4 239 868 : 126 855
ஆர்ஜெண்டினா : 4 066 156 : 83 941
ஸ்பெயின் : 3 729 458 : 80 465
ஜேர்மனி : 3 718 617 : 90 283
கொலம்பியா : 3 665 137 : 94 046
ஈரான் : 3 003 112 : 81 672
போலந்து : 2 877 007 : 74 515
மெக்ஸிக்கோ : 2 445 538 : 229 578
தென்னாப்பிரிக்கா : 1 722 086 : 57 410
கனடா : 1 398 275 : 25 873
பாகிஸ்தான் : 938 737 : 21 576
பங்களாதேஷ் : 820 395 : 12 989
ஜப்பான் : 767 808 : 13 841
சுவிட்சர்லாந்து : 699 697 : 10 853
இலங்கை : 216 134 : 2011
சீனா : 91 359 : 4636

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction