free website hit counter

வுஹான் ஆய்வகத் தகவல்களை ரகசியமாக அமெரிக்காவுக்கு வழங்கிய சீன உளவு நபர்?

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சீனாவில் இருந்து தப்பிச் சென்று வுஹான் ஆய்வகம் குறித்த அனைத்து தகவல்களையும், சீன உளவுத்துறை துணை அமைச்சர் அமெரிக்காவுக்கு வழங்கியதாக உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜிங்வெய் எனப்படும் இந்நபர் தற்போது சீனாவால் மிகவும் தேடப் படும் நபராக உள்ளார்.

கோவிட் வைரஸ் ஆய்வு குறித்தும் சீன அரசின் உயிரி ஆயுதம் குறித்தும் பல ரகசியத் தகவல்களை இவர் அமெரிக்காவிடம் கூறியிருப்பதாகத் தெரிய வருகின்றது. இவை நம்பகத் தன்மையுடன் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. சீனாவில் 30 ஆண்டுகளுக்குப் பின் மிகத் துல்லியமான அரச கண்காணிப்பில் இருந்து தப்பி வெளிநாடு சென்ற முதல் உயர் அதிகாரி ஜிங்வெய் ஆவார். 1989 தியானன்மென் சதுக்க படுகொலை சம்பவத்துக்குப் பின் சீனாவில் இருந்து தப்பி ஓடிய 2 ஆவது மூத்த அதிகாரியும் இவர் ஆவார்.

மார்ச்சில் அலாஸ்காவில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் இவரைத் தம்மிடம் ஒப்படைக்க சீனா அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கென் இதனை மறுத்து விட்டார். இதேவேளை அமெரிக்காவில் 150 நாட்களில் சுமார் 30 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப் பட்டிருப்பதாக அதிபர் பைடென் அறிவித்துள்ளார்.

ஜூலை 4 ஆம் திகதிக்குள் வயது வந்தோரில் சுமார் 70% சதவீதமானவர்களுக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது வழங்க அங்கு இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மறுபுறம் நியூசிலாந்தில் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது முதலாவது கோவிட் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். மேலும் மக்களும் இதனை செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

நியூசிலாந்தில் இதுவரை 10 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. ஜப்பானில் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் சுமார் ஒரு மாதமே உள்ள உள்ள நிலையில் அங்கு 6 முக்கிய பகுதிகளில் அறிவிக்கப் பட்டுள்ள அவசர நிலைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப் படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 178 608 331
மொத்த உயிரிழப்புக்கள் : 3 867 092
குணமடைந்தவர்கள் : 163 132 425
ஆக்டிவ் தொற்றுக்கள் : 11 608 814
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 82 111

நாடளாவிய புள்ளி விபரம் (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 34 393 269 : மொத்த உயிரிழப்புக்கள் : 616 920
இந்தியா : 29 823 546 : 385 167
பிரேசில் : 17 802 176 : 498 621
பிரான்ஸ் : 5 752 872 : 110 702
துருக்கி : 5 359 728 : 49 071
ரஷ்யா : 5 281 309 : 128 445
பிரிட்டன் : 4 610 893 : 127 956
இத்தாலி : 4 250 902 : 127 225
ஆர்ஜெண்டினா : 4 242 763 : 88 247
கொலம்பியா : 3 888 614 : 98 746
ஸ்பெயின் : 3 757 442 : 80 652
ஜேர்மனி : 3 728 559 : 90 877
ஈரான் : 3 080 526 : 82 746
போலந்து : 2 878 466 : 74 782
மெக்ஸிக்கோ : 2 471 741 : 230 959
தென்னாப்பிரிக்கா : 1 796 589 : 58 441
கனடா : 1 407 269 : 26 023
பாகிஸ்தான் : 947 218 : 21 940
பங்களாதேஷ் : 844 970 : 13 399
ஜப்பான் : 780 898 : 14 320
சுவிட்சர்லாந்து : 701 627 : 10 869
இலங்கை : 235 413 : 2480
சீனா : 91 564 : 4636

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction