free website hit counter

எத்தியோப்பியாவில் பொதுத் தேர்தல்! : நல்லாட்சிக்கு அபிய் அஹ்மெட் உறுதிமொழி

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆப்பிரிக்காவின் 2 ஆவது அதிக சனத்தொகை கொண்ட நாடான எத்தியோப்பியாவில் இன்று திங்கட்கிழமை பொதுத் தேர்தல் இடம்பெறுகின்றது.

2018 ஆமாண்டு அப்போதைய அரசுக்கு எதிரான வீதிவழி போராட்டங்களை வழிநடத்தி அபிய் அஹ்மெட் பிரதமர் பதவிக்கு வந்தார்.

அதன் பின் பல ஆண்டு வல்லாதிக்க ஆட்சிக்குப் பின் நல்லதோர் ஆட்சி வழங்குவேன் என அவர் மக்களுக்கு உறுதி மொழி அளித்திருந்தார்.
இதன் படி எத்தியோப்பியாவில் விரைவான வரலாற்று மாற்றம் ஏற்பட்டாலும், அங்கு யுத்தமும், பூர்வக் குடிகளுக்கு எதிரான வன்முறையும் கூடத் தொடர்ந்தது. எத்தியோப்பியாவின் இரு பெரும் பூர்வக் குடிகளான ஒரோமொஸ் மற்றும் அம்ஹராஸ் ஆகியவை இணைந்து வழங்கிய அழுத்தத்தின் பின் 2018 இல் ஆளும் கூட்டணிக் கட்சி சார்பாக அபிய் பிரதமராக நியமிக்கப் பட்டார்.

எத்தியோப்பியாவின் முதல் ஒரோமோ பிரதமரான இவர் ஜனநாயக ரீதியான நல்லாட்சி வழங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது. இதன் படி சிறைச்சாலைகளில் இருந்து குற்றவாளிகள் விடுவிக்கப் பட்டும், நாடு கடத்தப் பட்டவர்கள் மீள அழைக்கப் பட்டும், குற்றம் புரிந்தவர்களுக்கு மன்னிப்பு அளிக்கப் பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.

இவர் பதவியேற்று 2 மாதங்களில் இவரது கூட்டம் ஒன்றின் மீது கிரைனேட் தாக்குதலும் நடத்தப் பட்டது. இதில் உயிர் தப்பிய இவர் சுமார் 20 வருடங்கள் நீளமான எரித்ரியா நாட்டுடனான பனிப்போரையும் முடிவுக்கு கொண்டு வந்தவர் ஆவார். 1993 இல் எரித்ரியா எத்தியோப்பியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றாலும், எல்லைப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட ஒரு தசாப்த காலம் நீடித்த யுத்தத்தில் சுமார் 80 000 மக்கள் கொல்லப் பட்டனர்.

ஆனால் ஐ.நாவின் தலையீட்டுடன் 2002 ஆமாண்டு இந்த எல்லைப் போரை அபிய் முடிவுக்கு கொண்டு வந்தார். இதற்காக 2019 ஆமாண்டு அமைதிக்கான நோபல் பரிசையும் அபிய் சுவீகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆகஸ்ட் 2020 இல் எத்தியோப்பியாவில் நடைபெறவிருந்த பொதுத் தேர்தல் கோவிட் பெரும் தொற்று காரணமாக பிற்போடப் பட்டு இன்று ஜூன் 21 ஆம் திகதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction