counter create hit ஒரு ரசிகையால் தலைகீழாக மாறிப்போன சிம்பு !

ஒரு ரசிகையால் தலைகீழாக மாறிப்போன சிம்பு !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காதல் தோல்விகளே எஸ்.டி.ஆர். என்கிற சிம்புவை சுனங்க வைத்தது என்பதை அவருடைய ரசிகர்கள் நன்கு அறிவார்கள். முதலில் ரஜினியின் முத்த மகள் ஐஸ்வர்யாவும் சிம்புவும் காதலித்ததாக செய்திகள் வெளிவந்தன.

பிறகு நயன்தாராவுடனும் அதன்பின்னர் ஹன்சிகா மோத்வானியும் சிம்புவை உதறிச் சென்றது பரபரப்பானது. இந்தக் காதல் தோல்விகளால் துவண்ட சிம்பு தன்னுடைய சினிமா கேரியரைப் பற்றிக் கவலைப் படாமல் படப்பிடிப்புகளுக்கு செல்லவில்லை. இதனால், பல படங்கள் மிகத் தாமதமாக வெளிவந்தன.
உடல் எடை கூடி, தாடியும் நரையுமாக கிழவனைப்போல் ஆனார்.

ஒரு கட்டத்தில் சிம்புவைச் சந்தித்த ஒரு தீவிர ரசிகை, ‘நீங்கள் இப்படி ஆனது எங்கள் குடும்பத்தில் ஒருவர் தோல்வி அடைந்ததுபோல் உள்ளது.’ என்று கூறி அழுதுள்ளார். அந்த ரசிகை சிம்புவைப் பார்த்து இதைச் சொல்வதற்காக கனடாவிலிருந்து சென்னை வந்துள்ளார். காலையில் வந்திருங்கிய அவர், சிம்பு வீட்டுக்குச் சென்று, அவர் அங்கு இல்லாமல் போக.. அவரது குடும்பத்தினர் சிம்பு எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கே சிம்புவைப் பார்த்து அவரிடம் தனது ஆதங்கத்தைச் சொன்னதுடன்.. “எனக்கு இன்று பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் கனடாவுக்கு பிளைட். இதைச் சொல்லவே கனடாவிலிருந்து வந்தேன். எனக்கு இங்கு வேறு எந்த வேலையும் இல்லை. நீங்கள் பழைய நிலைக்கு மாறியவுடன் நான் மீண்டும் சென்னை வந்து உங்களோடு செல்ஃபி எடுத்துக்கொண்டு, உங்களுடன் காபி அருந்துகிறேன்.. நீங்களே என்னை சென்னை விமான நிலையம் வந்து செண்ட் ஆஃப் செய்யுங்கள்” என்று கூட ஆடிப்போன சிம்பு அப்படியே செய்திருக்கிறார். அந்த ரசிகைக்கு 35 வயதுகூட இருக்காது என்கிறார்கள் சிம்புவின் வட்டாரத்தில்.. அவரது கையைப் பிடித்துக் கொண்டு விமான நிலையத்தில் அழுத சிம்பு.,. அதன்பின்னர் இமயமலைப் பயணம் மேற்கொண்டு தன்னை முற்றிலும் மாற்றி கொண்டுவிட்டார்.

இன்று சிம்பு ஆளே மாறிவிட்டார். ‘மாநாடு’ படத்தின் 90% படப்பிடிப்பை ஒரே மூச்சில் முடித்துக் கொடுத்ததுடன் 4 படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார். 94 கிலோ இருந்த உடல் எடையை 74 கிலோவாக குறைத்து பழைய நிலைக்கு தன்னை மீட்டுக் கொண்டிருக்கிறார். இதை தன்னுடைய மாற்றத்திற்குக் காரணமான ரசிகைக்கும் சொல்ல, அவர் ‘நான் உங்கள் திருமணத்தில் உங்களைச் சந்திப்பேன். ‘மாநாடு’ படத்துக்காக காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

தற்போது பழைய அதே உற்சாகத்துடன் தன்னுடைய நடிப்பு வேலைகளை கவனிக்கும் சிம்பு சமைக்கும் 48 வினாடிகள் மட்டுமே கொண்ட வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அதற்கு முன் அவரது அம்மா சிம்புக்கு ஊட்டிவிடும் வீடியோவும் இணையத்தில் பிரபலமானது.
விரைவில் மாநாடு படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. அதை முடித்துக் கொடுத்துவிட்டு ‘பத்து தல’ அடுத்து நடிக்க இருக்கிறார் சிம்பு

- 4தமிழ் மீடியாவுக்காக: மாதுமை

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula