‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்?’ படத்தில் நடித்த காயத்திரி விஜய் சேதுபதியுடன் பல படங்களில் நடித்திருந்தாலும் இடையில கொஞ்சம் காணாமல் போனார்.
என்ன விஷயம் என்று விசாரித்தால், தனது பட்டப்படிப்பை முடிக்கப் போய்விட்டாராம். விஜய்சேதுபதியுடன் நடிக்க பல கதாநாயகிகள் காத்திருக்கும்போது.. உங்களுக்கு மட்டும் எப்படி எளிதாக வாய்ப்பு கிடைக்கிறது என்று குறும்பு செய்தியாளர்கள் கேட்கப்போய்.. ஒரு நண்பராக எனக்கு அவர் சிபாரிசு செய்கிறார் அதில் என்ன தவறு? எனக் கேட்க அனைவரும் வாயை மூடிக்கொண்டனர்.
தற்போது, தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி, சமீபத்தில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அப்படம் அவரது வழக்கமான மெலோ டிராமா பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் அவர் இயக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் காயத்திரியை கதாநாயகியாகப் போடும்படி விஜய்சேதுபதி சிபாரிசு செய்ததால்தான் அவருடைய குருவான சீனு ராமசாமி காயத்திரியைத் தேர்வு செய்திருக்கிறார் என்று கோலிவுட்டில் அழுத்தம் திருத்தமாகக் கதைக்கிறார்கள்.
Comments powered by CComment