ஒரு காலத்தில் பிரபலமான நகைச்சுவை நடிகராக விளங்கியவர் சின்னி ஜெயந்த். அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவர் பேசும் வித்தியாசமான மொழி ரசிகர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்டது.
தற்போது பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் 3 பெட்ரோல் பங்கிகளின் உரிமையாளராக உள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் அவருடைய மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பற்றியே பேச்சாக உள்ளது. அவருக்கு வயது 26. இவர் கடந்த 2019-ல் இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்வில் (ஐ.ஏ.எஸ்) வெற்றிபெற்றார்.
தற்போது அவருக்கு தன்னுடைய சொந்த மாநிலமான தமிழ்நாட்டிலேயே பணி ஒதுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பயிற்சி உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். கடந்த 3 மாதங்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பயிற்சி பெற்று வருகிறார். கள ஆய்வுகள் மேற்கொள்வதோடு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கிறார். இதனால் அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த பயிற்சியில் 1 ஆண்டு முடிந்தபிறகே அவர் ‘சார்’ஆட்சியராக நியமிக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments powered by CComment