இந்திய திரையுலகில் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவர் பிருந்தா மாஸ்டர்.
இவர் தற்போது துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிக்கும் ‘ஹே சினாமிகா’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். கடந்த 2015 இல் மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ’ஓகே கண்மணி’ படத்தில் நடன இயக்குனராக பணியாற்றினார். துல்கர் சல்மானின் நட்பை பெற்றுள்ளார். இந்நிலையில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரிக்கும் படத்தை இயக்கும்படி பிருந்தாவிடம் கேட்டுக்கொண்டது. ஏற்றுக்கொண்டு அவர் இயக்கியிருக்கும் படம்தான் ‘ஹே சினாமிகா’.
இந்தப்படத்தில் ராப் இசை பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது அதை துல்கர் சல்மானை கொண்டே பாட வைத்துள்ளார் பிருந்தா. அந்தப் பாடலில் பாரதியாரின் புகழ் பெற்ற கவி பாடலான அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற வரிகளை சுத்தமான தமிழ் உச்சரிப்புடன் துல்கர் சல்மான் பாடி இருப்பது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இருக்கிறது.
Comments powered by CComment