நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நீங்கிய பின்னரே பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
“நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே மதிப்பீடு செய்யப்படும். தற்போதைய பரிந்துரைகளின்படி, பயணக் கட்டுப்பாடுகள் 14ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். இதேவேளை தனிமைப்படுத்தலில் இருந்து 77 கிராம அலுவலகர் பிரிவுகள் தளர்த்தப்பட்டாலும், அங்கு உள்ளவர்கள் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Comments powered by CComment