ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள கொரோனா காலத்து பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன்14ஆம் திகதி நீக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுபாடுகள் மேலும் சில தினங்களுக்கு நீடிக்கப்படுமென பரப்பப்படும் வதந்திகள் தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த மே 25ஆம் திகதி இரவு 11.00 மணி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு ஜூன் 07இல் நீக்கப்படுவதாக இருந்த நிலையில், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, 19 நாட்களின் பின் எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளது.
Comments powered by CComment