தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் (ஜூன்) 21ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியான இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
கொரோனா 3ஆம் அலையின் உச்சத்தை தொடர்ந்து, கடந்த மே மாதம் 25ஆம் திகதி, நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு, மே 31ஆம் திகதி தளர்த்ப்படுமென அறிவிக்கப்பட்ட போதிலும், அது தொடர்ச்சியாக ஜூன் 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஜூன் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது, மேலும் ஒரு வாரத்திற்கு பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மே 25 இரவு 11.00 மணி முதல் நாடு முழுவதும் தொடர்ச்சியாக 26 நாட்களுக்கு இப்பயணக் கட்டுப்பாடு தொடரவுள்ளது.
Comments powered by CComment