இலங்கையை பொறுத்தமட்டில் தடுப்பூசி பெறாதவர்களே கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
முதலாவது கொரோனா அலையினால், நாட்டில் 13 உயிரிழப்புகள் மாத்திரமே பதிவாகியிருந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அதேபோல, இரண்டாவது அலையில் 591 உயிரிழப்புகள் பதிவாகியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமான கொரோனாவின் மூன்றாவது அலையில் மாத்திரம் 3 ஆயிரத்து 450 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments powered by CComment