செவ்வாய்க்கிழமை பிரான்ஸில் டிரோமே மாகாணத்திலுள்ள சிறு நகரமொன்றில் கொரோனா தொற்றுக்குப் பின் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் மக்களை சந்தித்து உரையாடுவதற்காக அவர்களை நெருங்கி சென்ற போது யாரும் எதிர்பாராத விதத்தில் ஒரு நபர் திடீரென அதிபரது கன்னத்தை அறைந்துள்ளார்.
மேலும் அருகே இருந்த இன்னொரு நபர் மாக்ரோனுக்கு எதிராகக் கோஷமிட்டார். உடனே அதிபரை பாதுகாத்த மெய்ப் பாதுகாவலர்கள் குறித்த இரு நபர்களையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தால் பிரெஞ்சு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி இணையத்தில் உலகம் முழுதும் வைரலாகி வருகின்றது. மாக்ரோனின் அலுவலகமும் இந்த வீடியோ உண்மையானது தான் என்று அறிவித்துள்ளது.
Comments powered by CComment