புகழ்பெறற 'டைட்டானிக்' படத்தின் நாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ உக்ரைன் இராணுவத்திற்கு பத்து மில்லியன் நன்கொடை அளித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் நாட்டில் போர் மற்றும் மனிதாபிமான முயற்சிகளை ஆதரிப்பதற்காக உக்ரேனிய இராணுவத்திற்கு $ 10 மில்லியன் நன்கொடை லியோனார்டோ டிகாப்ரியோ வழங்கினார்என உக்ரைன் பத்திரிகை நிறுவனமான உக்ரின்ஃபார்ம் தெரிவித்துள்ளது. இதன்படி தாக்குதலுக்கு உள்ளான உக்ரைன் நாட்டிற்கு தனிப்பட்ட வகையில், இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகையாகும்.
"டைட்டானிக்" நாயகனது தாய்வழி பாட்டி உக்ரைனின் ஒடெசாவைச் சேர்ந்தவடரெனவும், அதுகாரணமாக உக்ரேனிய வேர்களை அவர் கொண்டுள்ளார் எனவும், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை கடுமையாகக் அவர் கண்டித்துள்ளார் எனவும் மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Comments powered by CComment