free website hit counter

திரிபுராவில் அமைதியாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் - 81 சதவிகித வாக்குகள் பதிவு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள சிறிய மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று.
இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் 3-வது சிறிய மாநிலமாக இந்த மாநிலம் உள்ளது. 10 ஆயிரத்து 491 கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மாநிலம் 8 மாவட்டங்களை கொண்டது. இதில் 60 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவைடைந்தது. இந்த தேர்தலில் 20 பெண் வேட்பாளர்கள் உட்பட 259 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், வாக்காளர்கள் 3 ஆயிரத்து 337 வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.

மாலை 4 மணி வரையிலான நிலவரப்படி, திரிபுரா தேர்தலில் சுமார் 81 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இருப்பினும், வாக்குப்பதிவு இறுதி விவரம் இன்றிரவு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: