free website hit counter

பத்ம பூஷன் விருதை நிராகரித்த முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்தியாவில் கலை, இலக்கியம், மருத்துவம், சமூக சேவை என பல்வேறு
துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மறைந்த முன்னாள் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 4 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நீரஜ் சோப்ரா, சோனு நிகாம் உள்ளிட்ட மொத்தம் 107 பேர் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியம், நடிகை சவுகார் ஜானகி என தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கருத்துகள் கூறி வரும் குலாம் நபி ஆசாத் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகிய எதிர்க்கட்சியை சேர்ந்த இருவருருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 2000 முதல் 2011 வரை மேற்குவங்க முதல்வராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புத்ததேவ் பட்டாச்சார்யா தனக்கு பத்ம பூஷன் விருது வேண்டாம் என நிராகரித்துள்ளார்.

விருதுகள் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் விருது வேண்டாம் என புத்ததேவ் பட்டாச்சார்யா நிராகரித்துள்ளார். பத்ம விருதுகளை நிராகரிப்பது மிகவும் அரிதானது. அறிவிப்பிற்கு முன் அதனை பெறுபவர்கள் உறுதி செய்ய வேண்டும். அதன்படி, புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மனைவிக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டபோது அதனை அவர் ஏற்றதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால், “எனக்கு அப்படி எதுவும் தெரியாது. அரசாங்கம் எனக்கு (விருது) வழங்க முடிவு செய்திருந்தால், நான் அதை மறுக்கிறேன்.” என்று அவர் தெரிவித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் மத்திய அரசை வலுவாக விமர்சித்து வரக்கூடியவர் புத்ததேவ் பட்டாச்சார்யா (77). இதயம், நுரையீரல் பிரச்சினையுடன் வயது முதிர்வின் காரணமாக ஏற்படும் நோய்களால் அண்மைக்காலமாக அரசியல் நிகழ்வுகளில் பெரிதும் பங்குபெறாமல், பொதுவெளியில் தலைகாட்டாமல் புத்ததேவ் பட்டாச்சார்யா ஓய்வெடுத்து வருகிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction