free website hit counter

பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது - நிர்மலா சீதாராமன்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கியது. கடந்த 2 வாரங்களாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றம் கூடியதும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக முதலில் 12 மணி வரையிலும் பின்னர் 2 மணி வரையிலும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இதன் பின்னர் மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

கொரோனா, இரண்டாவது அலை, ஓமைக்ரான், ரஷியா-உக்ரைன் (போர்) உள்ளிட்ட சூழலிலும் பணவீக்கத்தை 7% குறைவாக கட்டுப்படுத்தி உள்ளது. அது அங்கீகரிக்கப்பட வேண்டும்.

பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது. கொரோனா உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை கடந்தும் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது. பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது. பொருளாதார மந்த நிலையோ, தேக்க நிலையோ ஏற்படும் என்ற கேள்விக்கு இடமில்லை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பொருளாதார வளர்ச்சி மீண்டுள்ளது. உலகமே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவின் வளர்ச்சி தொடருகிறது என்றார்.

கடந்த 27-ம் தேதி ரகுராம் ராஜன், "பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற அண்டை நாடுகளால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இருந்து இந்தியாவைப் பாதுகாக்கும் வகையில், இந்தியாவில் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிப்பதில் ரிசர்வ் வங்கி சிறப்பாகச் செயல்பட்டுள்ளது" என்று கூறினார்.

அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவை வேறுபடுத்தும் ரகுராம் ராஜன், "மத்திய அரசின் கடன் குறைவாக உள்ளது" என்று மேலும் கூறினார், இது ஒரு நல்ல அறிகுறி என்றார்.

மக்களவையில் விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்திற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசி வரும் நிலையில் மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் அதன் தோழமை கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction