free website hit counter

பஞ்சமி நிலத்தில் பல்கலைக்கழகம் - மக்கள் புகார் !

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து துணைவியார் பெயரில் பல்கலைக்கழகம் கட்டி வருவதாக மக்கள் புகார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் அமைந்துள்ள எடையாளம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜெகத்ரட்சகனின் துணையார் அனுஷியாவின் பெயரில் வேளாண் பல்கலைக்கழகம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த இடத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பல்கலைக்கழக கட்டிட பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 149 ஏக்கர் பரப்பளவு கொண்ட பல்கலைகழகத்திற்கு தற்போது இரண்டு மாடி அளவில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில கட்டிட பணிகள் தொடக்க அளவிலேயே உள்ளன.

இதே பகுதியில் 110 ஏக்கர் பரப்பளவில் பஞ்சமி நிலம், மற்றும் நிபந்தனை அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலம், மயிலம் காவல்நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம், இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆகியவை அடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உள்ளிட்ட இடங்களில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறும்போது,
"கீழ் எடையாளம் கிராமத்தில் 110 ஏக்கர் அளவில் பஞ்சமி நிலம் இருப்பதாகவும். தாழ்த்தப்பட்ட மக்களின் அறியாமையை பயன்படுத்தியும், 27 ஏக்கர் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.மேலும் பஞ்சமி நிலங்களை யாராலும் வாங்க முடியாது என்றும், அரசு ஆவணங்களிலேயே திருத்தங்களை செய்து மோசடி செய்திருக்கின்றனர்" என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction